151
முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையற்ற அரசாங்கம் என்ற வகையில், எதிர்வரும் மூன்று மாத காலம் அனைவரதும் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தினை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குருணாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சரவையை 15 ஆக மட்டுப்படுத்தியதில் சில முரண்பாடுகளும் சிக்கல்களும் ஏற்பட்டதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love