150
புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்..
20 புதிய அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.
1. திருமதி. எஸ்.எம்.மொஹமட் | சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு |
2. திரு. ஆர்.டப்ளியு.ஆர் பேமசிறி | வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு |
3. திரு. ஜே.ஜே.ரத்னசிறி | நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு |
4. திரு. ரவீந்ர ஹேவாவிதாரன | பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சு |
5. திரு. ஜே.ஏ.ரஞ்சித் | கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு |
6. திரு. டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்க | உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு |
7. திரு. எச்.எம்.காமினி செனெவிரத்ன | பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு |
8. திரு. டப்ளியு.ஏ.சூலானந்த பெரேரா | தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சு |
9. திருமதி. வசந்தா பெரேரா | மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு |
10. திரு. எம்.எம்.பி.கே.மாயாதுன்னே | துறைமுக மற்றும் கப்பற் போக்குவரத்து அமைச்சு |
11. திரு. எஸ்.ஹெட்டியாரச்சி | பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு |
12. திரு. ஆர்.பி.ஆரியசிங்க | வெளிநாட்டலுவல்கள் அமைச்சு |
13. திருமதி. ஏ.எஸ்.எம்.எஸ்.மஹானாம | மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு |
14. திருமதி. ஜே.எம்.சி.ஜயந்தி விஜேதுங்க | சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் வள அமைச்சு |
15. திரு. ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க | காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு |
16. திரு. எம்.பி.டி.யு.கே.மாபா பத்திரன | கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு |
17. திருமதி. ஆர்.எம்.ஐ.ரத்னாயக்க | கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு |
18. திருமதி. பி.எஸ்.எம்.சார்ல்ஸ் | சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு |
19. திரு. என்.பி.மொன்டி ரணதுங்க | சிறிய, நடுத்தர அளவிலான வர்த்தக மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு |
20. கலாநிதி பிரியத் பந்து விக்ரம | நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு |
Spread the love