அரசியல் அமைப்புச் சபை இன்று (12.12.19) கூடவுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அரசியல் அமைப்புச் சபை கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
10 உறுப்பினர்களை கொண்ட அரசியல் அமைப்புச் சபைக்கு சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் உத்தியோகப்பூர்வ அதிகாரத்திற்கு அமைய தெரிவுச் செய்யப்படுவர்.
அதற்கமைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற இருந்தாலும் எதிர்க் கட்சித் தலைவராக பெயரிடப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவிற்கு அதில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
சஜித் பிரேமதாச இதுவரையில் எதிர்க் கட்சித் தலைவராக நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்படாமையின் காரணமாகவே அவருக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது. எனினும் குழுவில் இடம்பெற்றுள்ள ஏனைய 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 சிவில் சமூக பிரதநிதிகள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
அரசியல் அமைப்பு சபைக்கு தெரிவுச் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை நீக்க முடியாது என்பதுடன் அவர்கள் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யும் வரையும் அந்த நியமனம் செல்லுப்படியாகும்.