(க.கிஷாந்தன்)
எல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நியூபர்க் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 55 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த 55 பேர் வெளியேற்றப்பட்டு, எல்ல நியூபர்க் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக நான்கு நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் எல்ல பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று இந்த பகுதி மக்கள் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும், மழை காலங்களில் மாத்திரம் முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாக வழமையாக உள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். #எல்ல #வெள்ளம் #மண்சரிவு #இடம்பெயர்வு