Home இலங்கைமட்டக்களப்பு கல்லடி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கல்லடி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by admin

பாறுக் ஷிஹான்


பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறைபிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(3) காலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஊறணி பகுதியில் உறவினர் வீட்டில் இருந்து ஆரையம்பதி நோக்கி சென்ற கார் தனது கட்டுடைப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் வயது 72 உடையவர் எனவும் தனது ஊரான அரசடித்தீவுக்கு செல்வதற்காக நின்றவேளை இவ்வாறு விபத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #மட்டக்களப்பு  #கல்லடி  #உயிரிழப்பு #விபத்து

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More