153
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பாக விரைவில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக கோப் குழுவின் புதிய தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முடிவில் கைவிடப்பட்ட அனைத்து கலந்துரையாடல்களும் மீண்டும் கூடிய விரைவில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் கோப் குழு கூட்டம் நேற்று (07.02.20) இடம்பெற்றது. அந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
Spread the love