Home இலங்கைஹம்பாந்தோட்டை – கொழும்பு கோட்டை வரையிலான சொகுசு பேருந்துச் சேவை…

ஹம்பாந்தோட்டை – கொழும்பு கோட்டை வரையிலான சொகுசு பேருந்துச் சேவை…

by admin

அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான சொகுசு பேருந்துச் சேவை நாளை ஆரம்பமாகவுள்ளது. பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ ஆரம்ப நிகழ்வுகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில், தங்காலை பேருந்து  நிலையத்தில் இடம்பெறவுள்ளன.

இதற்கமை, அப்பகுதியூடான பேருந்துக்  கட்டணங்களாக, ஹம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரை 880 ரூபா அறவிப்படவுள்ளது. தங்காலையில் இருந்து கோட்டை வரையிலான பேருந்துக்  கட்டணம் 680 ஆகும்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து மாக்கும்புர வரையான பேருந்துக்  கட்டணமாக 810 ரூபா அறவிடப்படவுள்ளதுடன், தங்காலையில் இருந்து மாக்கும்புர 610 ரூபா அறவிடப்படவுள்ளது.

நேற்று திறக்கப்பட்ட மாத்தறை – ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் புதிதாக 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த பேருந்துகள் மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கடவத்தை வரையில் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்த பேருந்துச் சேவை அம்பலாந்தோட்ட , தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பமாகவுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More