Home இலங்கைஜப்பான் கப்பலில் சேவையாற்றிய இலங்கையர்களுக்கு  கொரோனா தொற்று இல்லை

ஜப்பான் கப்பலில் சேவையாற்றிய இலங்கையர்களுக்கு  கொரோனா தொற்று இல்லை

by admin


ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் சேவையாற்றிய இலங்கை ஊழியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனைகளில் உறுதியானதை அடுத்து அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 14 நாட்களுக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 4 ஆம் திகதி ஹொங்கொங்கில் இருந்து 3,700 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு சென்ற டயமன்ட் பிரின்ஸஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்தது.

இதனையடுத்து கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் இந்திய ஊழியர்கள் 16 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கப்பலில் இருந்த 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தனர்.

டெல்லி அழைத்து செல்லப்பட்டவர்களில் 119 இந்தியர்கள், 2 இலங்கையர்கள் மற்றும் நேபாளம், தென்னாபிரிக்கா, பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது  #ஜப்பான் #கப்பல்  #இலங்கையர் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More