Home உலகம் மக்கா புனிதப் பயணத்துக்கான வீசாக்கள் இடைநிறுத்தம்

மக்கா புனிதப் பயணத்துக்கான வீசாக்கள் இடைநிறுத்தம்

by admin


சவூதி அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான வீசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. உம்ராவுக்காக சவூதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதியும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவூதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு வீசாக்கள் வழங்கபடமாட்டாது என சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  #மக்கா  #புனிதப்பயணம் #வீசாக்கள் #இடைநிறுத்தம்  #சவூதிஅரேபியா  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More