(வாஷிங்டன் டி.சி. மார்ச் 8, 2020) —சர்வதேச மகளிர் தினமன்று தனது சொந்த சமுதாயத்தின் ஆணாதிக்க வன்முறையின் மத்தியிலும், திட்டமிட்ட தேச அடக்குமுறைக்கு எதிராக முன்னிலையில் நின்று போராடி வருகின்ற தமிழ் பெண்களின் வரலாற்று மரபை PEARL கண்டுணர்கின்றது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களில் இருந்து விடுதலை இயக்கத்திலும் 2009 முதல் புலம்பெயர் போராட்டங்களிலும் ஈடுபட்டோர் வரை, தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் விடுதலையை கோரி தமிழ்ப்பெண்கள் எப்போதுமே முன்னணியில் நின்றுள்ளனர். இன்று அவர்களின் போராட்டத்தை நன்மதித்து, குறிப்பாக அரசியல் தளங்களிலான அவர்களுக்கெதிராக நடைபெறும் எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரும்படி கோருகின்றோம்.
துரதிட்டவசமாக, நச்சான ஆண்மையும் ஆணாதிக்கமும் தமிழ் சமுதாயத்தில் இன்னும் பரவலாக உள்ளதுடன், புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் பால்நிலை வன்முறை தொடர்ந்தும் தமிழ் பெண்களுக்கு தீங்கு விளைவித்து அவர்களை கொல்கின்றது. இச்சிக்கல்களைத் தீர்க்க சில அடிமட்ட இயக்கங்கள் போராடுவதை நாம் கண்டாலும், பால்நிலை வன்முறையை அழிக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆணாதிக்கத்திற்கும் நச்சு ஆண்மைத்தன்மைக்குமான எதிர்ப்பு தமிழ் தேசமெங்குமான கல்வி அமைப்புகள் மற்றும் கலாசாரச் செயல்களின் ஒரு பகுதியாகுவது முக்கியமாகும்.
இன்றும் பெரும்பாலான அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டுத் தளங்கள் தொடர்ந்தும்ஆண்களாலேயேஅதிகாரம்செலுத்தப்பட்டுவருகின்றது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நடாத்தும் போராட்டங்கள் மற்றும் நிலசிக்கல்களைப்பற்றிய போராட்டங்களைப் போன்ற தமிழ்தாயகத்திலான முக்கிய போராட்டங்கள் பெரும்பாலாக தமிழ்பெண்களால் வழிநடத்தப்பட்டிருந்தாலும், அரசியல் உரையாடல்களும் விவாதங்களும் அடிக்கடி இவர்களின் பிரதிநிதித்துவமின்றியே நடைபெறுகின்றன. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்ற புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சமூக அமைப்புகள் மத்தியில், ஒரு சிறுபான்மையானவை தான் தமிழ் பெண்களை தலைமைப்பதவிகளில் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இது பெயரளவுப் பிரதிநிதிதத்துவத்துக்கான கோருதல் அல்ல — தமிழ் பெண்களின் வாழ்க்கையை சமமற்ற முறையில் பாதிக்கும் கலந்துரையாடல்களிலும் தீர்மானங்களிலும் அவர்கள் ஒரு முதன்மைப் பகுதியாக இருத்தல் வேண்டும்.
ஏப்ரல் 25 ஆம் திகதியன்று வரவிருக்கும் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரதான தமிழ் கட்சிகளில் சில தமிழ் பெண்களை வேட்பாளர்கலாகப் பிரகடனம் செய்துள்ளன. இப்பன்முகத்தன்மையின் வெளிப்படை அதிகரிப்பால் நாம் ஒருவித தயக்கத்துடன் ஊக்குவிக்கப்பட்டிருந்தாலும்கூட, அனைத்து கட்சிகளும் அரசியலுள்ள பெண்களின் மீதான பால்நிலை சார்ந்த அவமதிப்பைக் கடுமையாக கண்டிக்குமாறு நாம் கோருகின்றோம். இவ்வேட்பாளர்களில் சிலர் இன்னும் அதிகாரபூர்வமாக வேட்புமனுதாக்கல் செய்யாதவிடத்து, ஏற்கனவே அவர்களின் மீதான் பால்நிலை அடிப்படையிலான தாக்குதல்கள் முடக்கி விடப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளஇயலாததாகும். அவர்களதுஅரசியல்மற்றும்கொள்கைகளின் முறையான திறனாய்வு ஊக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் எனினும், அவர்களின் பாலினம், தோற்றம், கலாச்சார விதிமுறைகளாகக் காணப்படுபவை மற்றும் பாலியல் நடத்தையைக் குறிக்கும் கருத்துக்கள் ஏற்க முடியாதவையும் மற்றும் அனைவராலும் தீவிரமாகக் கண்டிக்கப்பட வேண்டியவையும் ஆகின்றன. தமிழ் கட்சிகள் இச்சிக்கல்களைத் தீர்க்க தலைமையும் பொறுப்பும் ஏற்றுக்கொண்டு, அவர்கள் பக்கத்தில் இருந்து இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலில் பெண்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டுமென உண்மையாக இவர்கள் நினைத்தால், பெண்களால் பங்கேற்க இயலும் நல்ல சூழ்நிலையை— குறிப்பாக அவர்களின் அரசியல் போட்டியாளர்களுக்கும் ஏதுவான நிலையை உருவாக்குவது இவர்களின் பொறுப்பாகும்.
PEARL இச்சிக்கல்களைப் பற்றி வலுவான விவாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், வேறு சமூக அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களுடனும் கலந்துரையாட தயாராக உள்ளது. வாக்களிக்கும் மற்றும் தீர்மானிக்கும் சக்தி ஆண்களுடன் இருக்கும் நிலையில், அரசியல் அமைப்புகளில் பெண்கள் சாதாரணமான அங்கம் வகிப்பது மட்டும் போதாது.
இன்று, அரசியல் தலைவர்களையும் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் தலைவர்களையும் முடிவெடுத்தல் பதவிகளில் பெண்களை சமமாகச் சேர்க்கவும்; பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளைத் தடுக்கவும் கண்டறியவும் செயலாற்றவும் நிர்வாகிகளைப் பயிற்றுக்கவும்; பால்நிலை சார்ந்த பாத்திரங்களை நிராகரித்து அதற்குப் பதிலாக பாலின சமத்துவத்தை ஊக்குவிக்குமாறும் நாம் கோரி நிற்கின்றோம். மொத்தத்தில், எமது பெண்களே போராட்டத்தின் முதுகெலும்பு.