பிரித்தானியா, நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளும் நாளை (16) முதல் இரண்டு வாரக்காலத்திற்கு தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் விமான சேவைகள் 2 வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. #பிரித்தானியா #நோர்வே #பெல்ஜியம் #விமானசேவைகள் #கொரோனா