கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக ஐரோப்பாவின் எல்லைகள் அனைத்தையும் மூடிவிட ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula van der Leyon) தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தியதன் பின்னர் இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது
எல்லைகளை மூடுவதன் மூலம் தேவையற்ற பயணத்தை தவிர்த்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி 30 நாட்களுக்கு எல்லைகளை மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரான்சின் எல்லைகள் நேற்று முதல் மூடப்படுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ளார்.
சுகாதார ரீதியிலான ஒரு போரில் தற்போது நாம் உள்ளோம் என கூறிய அவர் இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை போல அலுவலகங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றை கட்டாயமாக மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #ஐரோப்பா #எல்லைகள் #மூடிவிட #ஐரோப்பியஒன்றியம்