ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பல்வேறு வடிவங்களில் விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரித்து வருகிறது. தற்போது BMW 3 Series ரக கார்களை தயாரிப்பதில் துரித கவனம் செலுத்திவரும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளை சீனாவில் இயங்கி வருகிறது.
இதேவேளை அமெரிக்காவை அண்மித்துள்ள மெக்சிகோவில் புதிய தொழிற்சாலை திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அங்குள்ள சான் லூயிஸ் போட்டோசி நகரில் உருவாகிவரும் இந்த தொழிற்சாலையில் எதிர்வரும் 2019-ம் ஆண்டுக்குள் கார் தயாரிப்பு ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், ஜெர்மனி நாட்டின் பிரபல நாளிதழுக்கு சமீபத்தில் செவ்வியளித்துள்ள அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், மெக்சிகோவில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத எல்லை வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அவரது இந்த செவ்வி ஜெர்மனின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது.