187
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கோரனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். கொடிகாமம் 522ஆவது படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க பாதுகாப்பு அமைச்சு – இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் இராணுவ முகாமில் அமைப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்போர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோர் இந்த நிலையத்தில் தங்க வைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடும் கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #யாழ்ப்பாணம் #கொடிகாமம் #தனிமைப்படுத்தல்மையம் #கொரோனா
Spread the love