உலக நாடுகளில் காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனாவை தடுக்காவிட்டால் பல லட்சம் பேரை பலி கொள்ளும் பேரழிவாக மாறும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் எச்சரித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி இருந்தாலும் அந்த நாட்டை விட தற்போது உலகின் ஏனைய நாடுகளில் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தாலி மற்றும் ஈரானில் மிக அதிகமாக உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்ற அதேவேளை தெற்காசியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் விடுத்துள்ள செய்தியில் கொரோனா காட்டுத் தீயாக பரவி வருகிறது. தொற்று நோய் பரவக் கூடிய பகுதிகளில் இது விரிவடைந்துவிட்டால் பல லட்சம் பேர் பலியாகும் பேரபாயம் உள்ளது. ஏற்கனவே இந்த பேராபத்தை கையாண்ட நாடுகள் இதர நாடுகளுக்கும் உதவ வேண்டும்.
செல்வந்த நாடுகள் ஜி20 உள்ளிட்ட நாடுகளுக்கும் உதவ வேண்டும். இப்படி நாடுகள் உதவிக் கொள்ளாமல் போனால் மிகப் பெரும் பேரழிவை சந்திக்க நேரிடும். இதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்