209
சமூக ஊடகங்களை பயன்படுத்தி குறைகளை வெளிப்படுத்தும் படையினர் தண்டிக்கப்படலாம் என இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற செயல் உற்சாகத்தைக் குறைக்கும் எனவும், பிரச்சனைகளை தீர்த்துவைக்க ராணுவத்திடம் சொந்த அமைப்புமுறை இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில் இந்திய ராணுவ வீரர் ஒருவர், உயரதிகாரிகளின் துணிகளை துவைப்பது, பாதணிகளை மினுக்குவது மற்றும் நாய்களை நடக்க அழைத்து செல்ல கட்டாயப்படுத்தப்படுவது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்தே, இந்திய ராணுவத்; தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love