161
கொரோனா வைரஸ் பாதிப்பு பிரிட்டனில் மிகவும் மோசமான சூழலை அடையும் நிலை ஏற்பட்டால், பேர்மிங்ஹாம் விமான நிலையத்தை, 12,000 உடல்களை வைக்கும் வசதியுள்ள தற்காலிக பிணவறையாகப் பயன்படுத்த பிரிட்டன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஒரு சரக்கு பெட்டகம் மற்றும் இரு முனையங்களை கொண்ட இந்த விமான நிலையத்தில், மோசமான சூழல் ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் 2,500 உடல்கள் வைக்கப்படும்.
“அந்த விமான நிலையத்தை பிணவறையாகப் பயன்படுத்த உண்மையில் நாங்கள் விரும்பவில்லை. எனினும், எதற்கும் தயாராக இருக்கிறோம்,” என்று சேன்ட்வெல் கவுன்சிலின் துணை தலைவர் வாசிம் அலி தெரிவித்துள்ளார்.
Spread the love