Home இலங்கைசென்னையில் இருந்து இலங்கை சென்றவர்களே தனிமைக்குச் செல்லுங்கள்…

சென்னையில் இருந்து இலங்கை சென்றவர்களே தனிமைக்குச் செல்லுங்கள்…

by admin


கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னை நகரில் இருந்து இலங்கைக்கு சென்ற  அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் இனங்காணப்பட்ட 4 கொரோனா நோயாளர்களில் இருவர் சென்னையில் இருந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னையில் இருந்து இலங்கை சென்ற  அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More