159
மெக்சிகோவில் இரவுவிடுதி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். மெக்சிகோவின் பிரிட் சுற்றுலா விடுதியில் உள்ள இரவு விடுதியில் பி.பி.எம். இசை திருவிழா என்னும் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது இங்கு துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர் அந்த இடத்தின் அருகில் உள்ள வேறு சுற்றுலா விடுதிக்கும் சென்று இதே போல துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
Spread the love