140
சிறந்த தற்காப்பு என்பது ஐரோப்பிய ஒற்றுமைதான் என்று ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியது குறித்து புகழ்ந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஏங்கெலா ஐரோப்பா தனது சுய அடையாளத்திற்காகவும், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான கொள்கைகளுக்காகவும் போராட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love