143
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இலங்கையில் இதுவரை 190 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் 50 பேர் பூரணமாக குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் 250 க்கும் அதிகமானோர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. #கொரோனா #அனில் ஜாசிங்க
Spread the love