Home இலங்கைசிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பொங்கல் விழா

சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பொங்கல் விழா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிவில்ப்பாதுகாப்பு  திணைக்களத்தின்  முல்லைத்தீவு  மற்றும்  கிளிநொச்சிக்கான  இணைந்த  கட்டளைத்  தலைமையகத்தின்  ஏற்பாட்டில் பொங்கல் விழா  இன்று  நடைபெற்றது

இன்று  காலை  ஒன்பது   முப்பது மணிளவில்  கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள  சிவில் பாதுகாப்புத்  திணைக்களத்தின் பண்ணையில்  ஆரம்பிக்கப்பட்ட  இப் பொங்கல்  நிகழ்வில்  வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே பிரதம   விருந்தினராகக்  கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற பொங்கல்  நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தினால்  அமைக்கப்பாட்ட  நாகதம்பிரான்  கோவிலிலும்  இடம்பெற்ற  சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொண்டதுடன்  பிரதமவிருந்தினர் உரையினையும்  நிகழ்த்தினார்

இந் நிகழ்வில்  வடமாகாண ஆளுநர்  றெஜினோல்ட்  குரே சிவில்ப்பாதுகாப்பு  திணைக்களத்தின் முல்லைத்தீவு  மற்றும்  கிளிநொச்சிக்கான  இணைந்த  கட்டளைத்தளபதி   கேணல் ரட்ணப்பிரிய பண்டு ,சிவில்ப்பாதுகாப்பு  திணைக்களத்தின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி  மேஜர்  சாகர வீரசிங்க,,சிவில்ப்பாதுகாப்பு  திணைக்கள உத்தியோகத்தர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More