Home இலக்கியம்பட்டறிவு உணர்த்திய பாடம் – சகாயராஜா புஸ்பலதா..

பட்டறிவு உணர்த்திய பாடம் – சகாயராஜா புஸ்பலதா..

by admin

பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

கண்ணுக்கு புலப்படா
நுண்ணுயிர் உலகமெல்லாம்
மிகத்தீவிரமாய்
கண்ணுக்கு புலப்பட்டது
பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

காலனிய மனோபாவம்
ஏற்க மறுக்கின்றது
கண்ணுக்கு தெரியா எதிரி
கொரோனா புகுத்தியது
பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

அடக்கியாளும் நவகாலனித்துவம்
கையேந்தும் நுகர்வு பண்பாடு
மீண்டும் உள்ளூர் உற்பத்தியில்
பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

உள்ளூர் விவசாயம்
உள்ளூர் வைத்தியம்
உள்ளூர் உற்பத்தி
இன்னும் பல
கைத்தவற வைத்த

காலனித்துவ சிந்தனை
பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

உலகமயமாக்கம்
நுகர்வுப் பண்பாடு
பல்தேசிய கம்பெனிகள்
எல்லாம் முடக்கம்
குறுகிய காலத்திற்குள்
பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

உள்ளூர் அறிவு அறிந்தும்
திரும்பிப்பார்க்க அறியாதவர்களாய்
நுகரும் மனிதர்களாய்
தம்வசப்படுத்திய பல்தேசிய
நிறுவனத்திற்கும்
பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

இறக்குமதி ஏற்றுமதி
இப்பொழுது இல்லை
விவசாயம் வீட்டுத் தோட்டம்
உணவுக்கு இன்று….
பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

வீண் விதண்டாவாதம் எதற்கு

நிராகரித்தல் நீக்கி
பேணிப் பாதுகாக்க
உள்ளூர் அறிவு வலுவான
இயங்கியல் கற்றலுக்கு
பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

தற்கால எதிர்கால
சமூதாய இடமளிக்கை
பட்டறிவு உணர்த்தியது
ஒட்டுமொத்த சமூகத்திற்கும்
பட்டறிவு உணர்த்திய பாடம்
உள்ளூர் அறிவு மீளுருவாக்கம்

சகாயராஜா புஸ்பலதா
கிழக்குப் பல்கலைக்கழகம்ரூபவ்
இலங்கை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More