142
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 449 பேர் பலியாகி உள்ளதாக தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மரணங்களுடன் மொத்த மரணங்கள் 16,509 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 4,676 தொற்றாளர்கள், புதிதாக இனம்காணப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 124,743 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் கடந்த வாரங்களில் உச்சம் தொட்ட மரணங்கள், பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஒருநாளில் ஏற்பட்ட மரணங்களும், பாதிப்புகளும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. #பிரித்தானியா #கொரோனா
Spread the love