இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்த அவர் அவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள் எனவும் 29 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த குறித்த 29 பேரும் ஜா-எல, சுதுவெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா #உயர்வு #வெலிசர #கடற்படைமுகாம்