124
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலும் 813பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேர இந்த இறப்புகளுடன் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 20,319 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இந்த 813 இறப்புகள் முந்தைய நாள் இறப்புகளை விட அதிகம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றுக்கு உள்ளான 4,913 பேருடன் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 148,377 ஆக அதிகரித்துள்ளது.
#பிரித்தானியா #கொரோனா #இறப்புகள்
Spread the love