நாகரீகம் என்ற சொல் உருப்பெற்ற காலத்தில் இருந்தே அக்கால சமூகங்களின் வாழ்வியலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. இதற்கு வரலாற்று ரீதியான ஆவணங்கள் சான்று பகர்கின்றன. 15ம் Áற்றாண்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அச்சியந்திரங்களின் வருகை, புதிய கண்டு பிடிப்புக்கள், பேரரசுகள் உருவாக்கம், நாடுகான் பயனங்கள், மனநோய் வைத்தியசாலைகள் உருவாக்கம் என்று பல மாற்றங்கள் இக் காலப்பகுதியில் இருந்து வீரியமடைந்து இன்று ஏவுகனைகள் உருவாக்கம், விண்வெளிப் பயணங்கள் வரை பல பிரமிக்கத்தக்க அதிசயங்கள் நிகழ்ந்தவாறே உள்ளது. இதனால் அந்தந்த காலத்து மக்களின் வாழ்வியல் முறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவது வழக்காறாகவே உள்ளது.
தற்காலத்தில் அதிகபட்ச நோய்கள், அழகியல் பிரச்சினைகள் தோன்றுவதற்கு நமது வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணமாக இருக்கின்றது. ‘ சாதாரணமாக நாம் குளிப்பது தொட்டு உணவு உண்பது, உறக்கம், நடைப்பயிற்சி, உடல் பயிற்சி என்று பல வற்றில் நாம் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட மெத்தனமாக இருக்கின்றோம்’. உண்மைதான் நாம் இன்று காலை எமுந்ததில் இருந்து இரவு படுக்கைக்குச் செல்வது வரை நமது நடை, உடை, பாவனை அனைத்துமே நிலைகுலைந்துள்ளது. இரவிலே நீண்ட நேர விழித்திருப்பு, காலையில் நீண்ட நேர Àக்கம். இது நமது உடலை சீரற்று இயங்க வைக்கின்றது.
பொதுவாக நள்ளிரவு வேளைகளில் பிரபஞ்சமே குளிர்வடைந்துள்ள நிலையில், எமது உடல் அதிகளவான வெப்பத்தினை வெளியேற்றுகின்றது. இதனால்தான் நம் முன்னோர்கள் அதிகாலை வேளையில் தலை குளிக்கும் பழக்கத்தினை பேணி வந்துள்ளனர். இதன் போது நமது உடல் சூடு வெளியேற்றப்பட்டு, உடலின் வெப்பநிலை பேணப்படுகின்றது. இதனால் பல நோய்கள் தம்மை அண்ட விடாமல் பாதுகாத்துக் கொண்டனர். ஆனால் இன்று சிறுவர்கள் முதற்கொண்டு பெரியோர் வரை பல வேலைப்பழுக்கள் மத்தியில் போராடி, தம்மை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அற்றவர்களாக இருக்கின்றனர் இதனால் பல வியாதிகள் அவர்கள் உடலில் குடிகொள்கின்றது. இன்று பலருக்கு கணச்சூடு(உடல் சூடு) அதிக விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பித்தம், மலச்சிக்கல், மலட்டுத்தன்மை போன்ற சிக்கல்களும், அத்தோடு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகளும் ஏற்படுகின்றது. இவை போன்ற பல வியாதிகள் நம் சரியான உறக்கமின்மைப் பிரச்சினையால் ஏற்படுகின்றது.
காலை எழுந்து பழங்கஞ்சி அருந்தி, ஏர்பூட்டி, வயல்களில் உழவு உழுது, தென்றல்காற்றில் இயைந்து, பறவைகளின் கானல் குரல்களில் மெய்மறந்து இயற்கையோடு ஒன்றித்து சோர்வில்லாமல் வேலைபார்த்த காலம் போய், இன்று விதம் விதமான உழவு இயந்திரங்கள், பீடைநாசினிகள், களைகொல்லிகள் என்று அதிக இரசாயன பதார்த்தங்களை பயபடுத்தி நிலங்களையும் செயலிழக்கவைத்து, தாங்களும் நச்சுக்களை உண்டுவரும் பண்பாடு உருவாகியுள்ளது. குறைந்த காலங்களில் அதிக விளைசலை பெற்றுக்கௌ;ளும் பல வகை இனங்கள் உருவாகியுள்ளது. இது வணிக உலகம் என்பதனால் எல்லாமே றொக்கட் வேகத்தில் பறக்கின்றது. அதில் எம் உயிர் மட்டும் விதிவிலக்கா? அதுவும் அதை விட வேகமாகவே செல்கின்றது. அன்று இயற்iயோடு உறவாடி இயற்கையை நம்பி வாழ்ந்தவர்களை இயற்கையும் வாழ வைத்தது. ஆனால் இன்று செயற்கையின்பால் உந்தப்பட்டு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு யார் பொறுப்பு? அவர்களுக்கு அவர்களே பொறுப்பு.
இடத்துக்கு இடம் அபிவிருத்தி என்ற பெயரில் பல அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து, மக்களை அதன்பால் ஈர்த்து, ஆதிக்கம் செலுத்தும் நோக்கில், ஒரு ஆதிக்க வர்க்கம் தன்னிச்சையாக செயற்படுவது புலனாகின்றது. உணவே மருந்து என்று வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மத்தியில், அபிவிருத்தி என்ற சதிகாரன் உள்நுழைந்து பல நிவனங்களையும், உணவு சாலைகள், விடுதிகள், தொழிச்சாலைகள், வங்கிகள், மானிய, கடன் திட்டங்கள் என்று பல திட்டங்களை தீட்டி மக்களை கடனாளிகளாக தங்கள் முன் மண்டியிட வைத்து, சுய இலாபம் காணும் இராட்சதர்கள் மத்தியில் எம் வாழ்க்கை முறையே சிக்கித்தவிக்கின்றது.
நம்மிடம் இருந்தவற்றை இல்லாமல் செய்து, நம்மை இயலாமை அற்றவர்களாக மாற்றி, சிந்திக்க விடாது தம் சிந்தனைகளுக்குள் முடக்க வைத்து, நம் இயலாமை பற்றி பல விவாதங்களை முன் வைக்கின்றனர். உ.ம்- கிராமத்தவர்களை பாமரர்கள், படிக்காதவர்கள், நாகரீகம் அற்றவர்கள் என்று ஒதுக்குகின்றனர். ஆனால் படித்தவர்கள் மத்தியில் இல்லாத பல நல்ல, கிடைப்பதற்கரிய விடயங்கள் அங்குள்ளமை பற்றி மறைக்கவும், மறுக்கவும் படுகின்றது. இதனால் எதிர்காலம் சுயநலம் மிக்க சமூகமாக மாறி வருகின்றது. விவசாயம் பற்றி அனுபவம் இல்லாதவர்கள், நான்கு சுவர்களுக்குள் ஆய்வுகள் மேற் கொண்டு பட்டம் பெற்று, தம்மைப் போன்ற எதிர் காலத்தை உருவாக்குகின்றனர். இதனால் எதிர் கால விவசாயம் கணனிகளையும், அதிக இரசாயன பதார்த்தம் கொண்ட விதைகளையும், இரசாயன உரங்களையுமே நம்பி இருக்கும் நிலை வரும். இதானால் சந்தைப் பொருளாதாரம் உயரும், ஆனால் விவசாயத்தை நம்பி இருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகும்.
இன்றைய காலகட்டத்தில் கல்வி, தொழில், ஊடகம், விளம்பரம் எல்லாம் அர்த்தம் அற்றதாக மாறியுள்ளது. பொதுவாக விளம்பரத்தை எடுத்துக் கொண்டால் வியாபார நோக்கத்திற்காக, மக்களை அதிகம் கவர வைக்கும் வியம்பரங்கள் மலிந்துவிட்டன். இவை இன்று அர்த்தமற்றதான செயற்பாடாகவே உள்ளது. ஆங்கிலம் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை என்ற உந்துதல்கள் நம்மவர் மத்தியில் உள்ளது. இதனால் ஆங்கிலம் தெரியாதவர் முட்டாள்கள், நாகரீகம் அற்றவர்கள் என்று அவர்களை ஒதுக்கி, வளரவிடாமல் செய்யும் சுயநலக்காறர்கள் தான் இன்றைய மனிதர்கள்.
அன்னிய ஆக்கிரமிப்பிற்கு உற்பட்ட நாடுகளில், அவர்களின் சுயத்தை செயலிழக்கவைத்து அன்னிய பண்பாடு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உ.ம்- ஆபிரிக்க பழங்குடியினர். முதலாழித்துவ வர்க்கம் ஒன்று உருவாகி, தாராள பொருளாதாரத்தின் ஊடாக போட்டியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூட்டுறவு தன்மையை இல்லாமல் ஆக்கி தனியுடமையை வெல்ல வைத்துள்ளது. இதன் காரணமாக போட்டிகள் அதிகரித்து நின்மதி இல்லாத வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காலம் வேகமாக இயங்கிக் கொண்டிருப்பது உண்மைதான். அதோடு நாமும் சேர்ந்து இயங்கவில்லை என்றால் நமக்கு வாழ்க்கையில்லை என்ற நிலை உண்டு. நவநாகரீக போர்வையினைப் போர்த்திக்கொண்டு ஓய்வில்லாமல் வேலை செய்து இளைத்துக் களைத்துப் போகும் மதனிதர் சமூகம் இன்று பெருகி விட்டது. ஏன் நிலையில்லாத ஒன்றுக்காக இத்தனை போராட்டங்கள்?
இயற்கையோடு உறவு கொண்ட மனிதன் அன்று கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தான். தம் வேலைகயை பகிர்ந்து, குழுக்களாக செய்தனர். இதனால் வேலைப்பளு, சோர்வு, மனஅழுதத்தங்கள் இன்றி, அத்தோடு தங்கள் மத்தியில் பொட்டி, பொறாமை ஏற்படா வண்ணம் தேவைக்கு ஏற்ப உழைத்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். இன்று தேவைகள் அதிகரித்து, அனாவசியமான செலவுகள் ஏற்பட்டுள்ளமையால் கூட்டுகுடும்ப வாழவில் இருந்து விடுபட்டு கருக்குடும்பங்களா வகுக்கப்பட்டு நிறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம். தற்காலத்தில் கணவன், மனைவி இருவரும் உழைத்தும் கூட தங்கள் ஓரிரு குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ முடியாத நிலை உண்டு. ஆனால் அன்று பத்து, பன்னிரெண்டு குழந்தைகளைக் பெற்று அழகான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
‘வாய் விட்டு சிரத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்கள் ஆனால் இன்று ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைக்கும் தன்மை மாறி தலைகுனிந்து கைபேசிகளைப் பார்த்து தனியாக சிரிக்கும் நிலை இளம் சமூகம் மத்தியில் உருவாகியுள்ளது. ஒருவர் சிரிக்கும் போது அவரின் உடலில் இருந்து என்கெபலின்ஸ், என்டபின்ஸ் ஆகிய சுரப்புகள் சுரக்கின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், உடலின் வலியை தாங்கக் கூடிய திறனையும் கொண்டுள்ளது. அத்தோடு சிரிப்பதனால் இதய நோய்கள், இரத்தக் குழாய் அடைப்புகள், நீரிழிவு நோய்கள் குணமாவதுடன், மன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் செய்கின்றது.
பரபரப்பான இவ் உலகில் நாம் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வெகுவாக குறைந்துள்ளது. நம்முடைய தவறான உணவுப்பழக்கவழக்கங்களினால் நம் ஆயுட்காலங்கள் குறைந்து செல்கின்றது. நம்முடைய தவறான பழக்கவழக்கங்களினால், நம்முடைய உடல் சீரற்று இயங்க ஆரம்பிக்கும். இளம் வயதிலே பல நோய்கள் ஏற்பட்டும். இதனால் மருந்துகளை அதிகம் உட்கொள்ள நேரிடும். இவற்றை பாவிப்பதனால் இன்னும் பல விளைவுகள் ஏற்படும். இதை அனுபவிப்பதை விட இலகுவாக நாம் உணவு முறைகளிலும், பழக்கவளக்கங்களிலும் மாற்றங்களை கொண்டுவருவோமானால் எமது எதிர்காலம் எம் கண்களுக்குத் தெரியும். தற்கால நடைமுறையில், நமது சூழலுக்குத் தகுந்தவாறு நம் உள்ளூர் அறிவினையும் மேம்படுத்தி நமது வாழ்க்கையை இயற்கையோடு கலப்பதற்கான கால அவகாசம் தரப்பட்டுள்ளது. காலத்தின் அருமையை உணராதவன் அதை வீணடிக்கின்றான், உணர்ந்தவன் அதை அனுபவிக்கின்றான். காலம் செய்த புதுமை நம்மை இன்று ஓய்வுநிலைக்கு தள்ளி நம்மை சிந்திக்க வைத்துள்ளது.
நாம் இன்று நாகரீகத்தின் உச்ச கட்டத்தில் இருக்கின்றோம். அதற்கு நம்மை இசைவாக்கியும் கொண்டோம் எனவே நாம் மாற்றத்தினை சடுதியாக செய்து விட முடியாது. நமது உடல் மற்றும் உள்ளமும் அதை ஏற்காது. ஆகவே சின்ன சின்ன விடயங்களில் முதல் கவனத்தை செலுத்தி நம் உடல் இயக்கத்தை சீர்படுத்த வேண்டும். நாம் ஒவ்வோருவரும் நமது உடலையும் உள்ளத்தையும் புனிதமாக பாதுகாக்க வேண்டும். உடலும், உள்ளமும் கணவன், மனைவி போன்றது, உள்ளம் Àய்மையாக இருந்தால்தான் உடல் நன்றாக இயங்கும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம். மாடாக உழைத்தது போதும் நம்மை நாம் மதித்து நம்முடைய வாழ்வியலில் மாற்றங்களினை கொணர்ந்து, எதிர் காலத்தை கட்டியெழுப்புவோம்.
அ.நிவேத்திகா