178
குருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகிய 326 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது. அலவ்வ, பொல்கஹவெல, மடஹபொல, நிக்கவெரட்டிய, கொடவெஹெர, தும்மலசூரிய, உடுபத்தாவ, மாவத்தகம, கல்கமுவ, குளியாப்பிட்டிய, மாஹோ, வாரியப்பொல, பண்டாரகொஸ்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதில் 9 பேர் இராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது #குருநாகல் #சுயதனிமை #கொரோனா
Spread the love