156
கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர்களினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
கல்வி வலயத்தினால் , ஆசிரியர்களுக்கு , ஆசிரிய அடையாள அட்டைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு , சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகள் காணப்படுகின்றன.
அது தொடர்பில் ஆசிரியர்கள் , வலய அதிகாரிகளிடம் கேட்ட போது, இது இராணுவம் காவல்துறையினருக்கு காட்டவே பயன்படும். வேறு தேவைகளுக்கு உங்களுக்கு ஆசிரிய அடையாள அட்டை தேவையில்லை தானே. இராணுவம் காவல்துறையினருக்கு காட்டும் போது, அதில் தமிழ் இருந்தால் , அவர்களுக்கு தமிழ் விளங்காது தானே. அதான் தமிழ் இல்லை அவர்களுக்கு விளங்க கூடியவாறு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் அடையாள அட்டையில் விபரங்கள் உள்ளன என பதிலளித்து உள்ளனர்.
இராணுவம் காவல்துறையினருக்கு அடையாள அட்டை காட்டுவதாக இருந்தால் . ஒன்றில் மூன்று மொழிகளிலும் விபரங்கள் இருக்க வேண்டும். இல்லை ஏனெனில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் விபரங்கள் இருந்திருக்க வேண்டும். இது வேண்டும் என்றே தமிழ் மொழியை புறக்கணித்துள்ளனர் என ஆசிரியர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் சிங்களம் , தமிழ் இரண்டும் அரச கரும மொழிகள் ஆகவும் , ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் உள்ளது. இந்நிலையில் அரசிலமைப்ப மீறி, தமிழ் ஆசிரியர்களை கொண்ட கிளிநொச்சி கல்வி வலயத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் அரச கரும மொழிகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரியுள்ளனர் #கிளிநொச்சி #அடையாளஅட்டை #தமிழ்புறக்கணிப்பு
Spread the love