பிரித்தானியாவில் இருந்து நேற்று அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள் சிலர் கட்டுநாயக்க விமானநிலையத்தில், அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள் என வெளிவரும் செய்திளை கட்டுநாயக்க விமானநிலைய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்களுக்கு அமைய, பாரிய பிரச்சினைகள் எதுவும் விமானநிலையத்தில் ஏற்படவில்லை என, விமானநிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தவிசாளர் ரஜீவசிறி சூரியஆராச்சி தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து சென்றவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்கக்கு அனுப்பி வைக்கும் போது, ஏற்பட்ட சிறிய பிரச்சினையொன்று பாரிய பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.