165
மன்னார் நகர சபைபிரிவில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட தனியார் வாடகை போக்கு வரத்து சங்கத்தின் எல்லைக்குள் மன்னார் நகர சபை தலைவர், செயலாளர், மற்றும் ஊழியர்கள் செல்ல மன்னார் மாவட்ட நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை மாலை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் மாவட்ட தனியார் வாடகை போக்கு வரத்து சங்கத்தின் கோரிக்கைகளை உதாசீனம் செய்த மன்னார் நகர சபை தலைவர்; ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது சட்டத்துக்கு முரனான முறையில் அவரின் குழுவினருடன் சென்று சங்கத்தின் கட்டிடத்தை தரைமட்டமாக்கியதுடன் இவர்களின் சொத்துகளுக்கு பாரிய நஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மன்னார் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படாமையால் மன்னார் மாவட்ட தனியார் வாடகை போக்குவரத்து சங்கம் சட்டத்தரணிகள் ஊடாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தை நாடிய போது மன்னார் நீதவான் எம்.கணேசராஜா குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
நேற்று திங்கட்கிழமை (11) மன்னார் நீதி மன்றத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தலைமையில் சட்டத்தரணிகளான சிரேஸ்ட சட்டத்தரணி உனைஸ் பாறூக், செ.டினேஸன், எம்.ஹஸ்மி, தர்மிலன் டயஸ் மற்றும் ரூபன் டபேரா ஆகியோர் பாதிப்படைந்தவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகி மன்னார் நகர சபை தவிசாளரினால் மன்னார் மாவட்ட தனியார் வாடகை சங்கத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நகர்த்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் தாக்கல் செய்தனர்.
இவ் வழக்கின் போது மன்னார் மாவட்ட தனியார் வாடகை சங்கத்தின் உறுப்பினர்களும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இது விடயமாக மன்றில் நகர்த்தல் பத்திரங்களை தாக்கல் செய்து சிரேஸ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் பாதிப்படைந்துள்ள மன்னார் மாவட்ட தனியார் வாடகை போக்குவரத்து சேவை சங்கத்தின் சார்பில் தனது சமர்ப்பணத்தை மன்றில் தெரிவித்தார். சமர்ப்பணங்களுக்கு செவிமடுத்த மாவட்ட நீதிபதி பின்வருமாறு கட்டiயை பிறப்பித்துள்ளார்.
எதிரியாளர்களோ அவர்களின் உத்தியோகத்தர்களோ அல்லது அவர்களின் ஏவலாளிகளோ குறித்த 40 பேச் ஆதணத்தில் உள் நுழையக்கூடாது என்ற தடை உத்தரவினையும், எதிரிகளுக்கு அழைப்பு கட்டளை அனுப்புமாறும், இடைக்கால தடை உத்தரவுக்கான அறிவுறுத்தலை அனுப்புமாறும் மன்றின் பதிவாளருக்கு நீதவான் எம்.எம்.கணேசராஜா பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும் சீ.சீ.டி கமரா ஒளிப்பதிவு நாடா பெறுவதில் தொடர்பில் உரிய வழக்கை தாக்கல் செய்து விண்ணப்பத்தை மேற்கொள்ளுமாறும் வழக்காளியின் சட்டத்தரணிக்கு பணிப்புரை வழங்கியதோடு இவ் வழக்கை எதிர்வரும் 22.05.2020 ஆம் வரை மேலதிக விசாரணைக்காக ஒத்திவைத்துள்ளார். #மன்னார் #அழைப்பாணை
Spread the love