192
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்த்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று நவாலி சென் பீற்றர் தேவாலயம் அருகில் இடம்பெற்றது. 1995 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் திகதி விமானப் படையினரின் விமான குண்டு வீச்சில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டதின் நினைவாக நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இன்றைய நினைவேந்தல் நிகழ்வுகளையும் குழப்பும் விதமாக மானிப்பாய் காவல்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை அப்புறப்படுத்த முனைந்தனர்.
அதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி ந. காண்டீபன் ஆகியோர் உடன்படாது , நாம் சுகாதார அறிவுறுத்தல்களை பின் பற்றியே நிகழ்வினை முன்னெடுக்க உள்ளோம் என கூறினார்கள். அதனை அடுத்து நிகழ்வுக்கு காவல்துறையினர் அனுமதித்தனர்.
நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களும் அஞ்சலியை செலுத்தினர்.
நிகழ்விடத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். #முள்ளிவாய்க்கால் #நினைவேந்தல் #நவாலிதேவாலயம் #இடையூறு
Spread the love