அவுஸ்திரேலியாவின் நியூ சௌத்வேல்ஸ் மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் உணவு விடுதிகள் மற்றும் காப்பி ஷொப்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவுகளுக்காக பப்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட போதும் மதுபான விடுதிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
அவுஸ்திரேலியாவின் ஏனைய நகரங்களில் கட்டுப்பாடுகள தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் அதிக மக்கள்தொகை உள்ள நகரான சிட்னியில் உணவு விடுதிகள் மற்றும் காப்பி ஷொப்கள் ஆகியவை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும் சிட்னியில் உள்ள அனைத்து விடுதிகளும் இன்று திறக்கப்படவில்லை.
அதேவேளை உணவு விடுதிகள் மற்றும் காப்பி ஷொப்களில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அவுஸ்திரேலியாவில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துவந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலக அளவில் சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஒன்றாக கருதப்படுகின்ற அவுஸ்திரேலியாவில் இதுவரை 100க்கும் குறைவான மரணங்களே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது