குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எல்லை நிர்ணய அறிக்கை குறித்து சிறுபான்மை கட்சிகளின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டதன்பின்னர் வர்த்தமானியில் பிரசூரிக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார்.
எனினும், இவ்வாறு வர்த்தமானியில் பிரசூரிக்கப்படுவதற்கு முன்னதாக சிறுபான்மை கட்சிகளின் கருத்துக்கள் கோரப்பட வேண்டுமென அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடல் ஒன்றின் போதே அமைச்சர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாய முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் பங்கேற்றிருந்தன என்பது குறிப்பிடத்கத்கது.