202
கடந்த வருடம் (2019)ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 திகதி மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு என மாவீரர் தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு மேற்கொண்டு நாடத்தியமை தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினுடைய தலைவர் வி.எஸ். சிவகரனிடம் இன்றைய தினம் புதன்கிழமை இரண்டு மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த விசாரணையின் போது தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினுடைய நிகழ்வை தொடர்சியாக அரசாங்கத்துக்கு எதிராக நடாத்தி வருகின்றமை தொடர்பாக சிவகரனிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதுடன் குறித்த விடையம் தண்டனைக்குரிய குற்றம் எனவும் இனி வரும் நாட்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடு பட்டால் உடனடியாக கைது செய்வோம் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த திடீர் விசாரணை தமிழ் உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #மாவீரர்தினம் #சிவகரன் #மாவீரர்துயிலும்இல்லம்
Spread the love