Home இலங்கையாழ். புறநகரில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு -ஒருவர் ஆபத்தான நிலையில்

யாழ். புறநகரில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு -ஒருவர் ஆபத்தான நிலையில்

by admin

யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று இரவு 7.15 மணியளவில் யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு சந்தனமாத கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் (வயது – 27) என்ற இளைஞனே தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றயவரான முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்களையும் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றது. பாசையூரைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் ஒன்றே இந்த கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டது என்று  காவல்துறையினர் தெரிவித்தனர்.   #யாழ்ப்பாணம்  #பாண்டியன்தாழ்வு  #இளைஞர்கள்   #வாள்வெட்டு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More