159
முச்சக்கர வண்டியில் வந்த மூன்று இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அவர்களை கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். உரும்பிராய் பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்கள் மீதே இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, முச்சக்கர வண்டியில் வந்த மூன்று இளைஞர்களும் உரிய முறையில் முக கவசம் அணியாதிருந்தனர். அதனை சரியான முறையில் அணியுமாறு இராணுவத்தினர் கூறிய போது இரு தரப்புக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் இராணுவத்தினர் கோப்பாய்காவல்துறையினரிடம் , மூன்று இளைஞர்களும் தம்மை தாக்க வந்தனர் என குற்றம் சாட்டி ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் மூன்று இளைஞர்கள் மீதும் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் எனும் குற்றசாட்டில் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். #இராணுவத்தினர் #இளைஞர்கள் #கைது #முச்சக்கரவண்டி
Spread the love