குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையுடனான உறவு பெறுமதி மிக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுமார் அறுபது ஆண்டுகள் நட்புறவு நீடித்து வருகின்றதென தெரிவித்துள்ளது.
இரணவிலவில் அமைந்துள்ள அமெரிக்க குரல் வானொலிச் சேவையானது தனியார் நிறுவனமொன்றினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த வானொலிச் சேவையில் அமெரிக்க நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இந்த வானொலிச் சேவைக்கு சிறந்த ஆதரவினை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானொலிச் சேவை தொடர்பிலான குத்தகை ஒப்பந்தம் ரத்த செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.