170
இந்திய அரசு தமிழகத்தை தன்னுடைய மாநிலமாக கருதினால் தமிழக மக்களை தன்னுடைய பிரஜைகளாக கருதினால், தமிழமே வெகுண்டெழுந்து ஜல்லிக் கட்டு தடையை நீக்க கோருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக் கட்டு தடை நீக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில், கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பின்போதே அவ் அமையத்தின் செயலாளர் தீபச்செல்வன் இவ்வாறு குறிப்பிட்டார்
இந்தியா எப்போதுமே தமிழகத்தை தன்னுடைய மாநிலமாக கருதியிருக்கவில்லை. தமிழகத்தின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. ஈழத்தில் நாம் அழிக்கப்பட்டபோது, இனக்கொலைப் போரை தடுத்து நிறுத்துமாறு தமிழகமே கோரிய குரலுக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டு உரிமை, இப்போது தமிழகம் தன்னுடைய பண்பாட்டுக்காக போராடும் குரலுக்கும் செவிசாய்க்காமல் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் பிரிந்துபோகும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் உள்ள உறவுகள் நாங்கள் கொல்லப்படுகின்றபோதும், எங்கள் இனத்தின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்பவர்கள், அவர்களுக்காக இந்தக் கவனயீர்ப்பின் மூலம் எங்கள் ஆதரவை, அன்பை, தொப்புள் கொடி உறவை வெளிப்படுத்துகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Spread the love