(க.கிஷாந்தன்)
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொட்டகலை பொரஸ்கிறிக் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று ( 04.06.2020) மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 10 பேரும் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. #தொழிலாளர்கள் #குளவிகள் #சிகிச்சை