ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் சார்பில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள்ள நிலையில் குடியரசுத் தலைவர், பிரதமரிடம் ஒப்புதல் பெற்று பிறப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதலமைச்சர் பன்னீர் செல்வம், ஓரிரு நாட்களிலில் அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள மாணவர்கள் இருப்பினும் வாடிவாசல் திறந்து, அதனுள் இருந்து காளைகள் சீறிப்பாயும் காட்சியை பார்க்கும் வரை தாங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளதுடன் இது உலக தமிழர்களுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.