Home உலகம்கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது – பிலிப்பைன்ஸ்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது – பிலிப்பைன்ஸ்

by admin


கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசில், ரஸ்யா, பிரித்தானியர், இந்தியா ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் முடக்கநிலையை நீட்டித்து வருகின்றன.

இதனால் உலகம் முழுவதிலும் பாடசாலைகள், கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவிட்- 19 வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அமலுக்கு வரும் வரையில் பாடசாலைகள்; திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.

தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பாடசாலையில் உட்கார வைப்பது சிரமம் எனவும் குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும் போது தொற்று நிச்சயம் பரவும் எனவும் பிலிப்பைன்ஸ் கல்வித்துறை செயலர் லியோனர் பிரியோனஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓகஸ்ட் இறுதி வாரம் முதல் இணைய மற்றும் தொலைக்காட்சி மூலமாக கற்பித்தல் வகுப்புகள் தொடங்கும். எனினும் வறுமையான மற்றும் இணைய இணைப்பு இல்லாத தொலைதூர சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி குறித்துக் கவலை எழுகிறது. இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் கொரோனா தொற்றால் 22,474 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்1,011 பேர் பலியாகி உள்ளனர்.  #கொரோனா  #தடுப்பூசி #பாடசாலைகள் #பிலிப்பைன்ஸ்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More