உலகம் பிரதான செய்திகள்

தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்திய வடகொரியா  :


தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ள வட கொரியா தென் கொரியாவை தனது எதிரி என வர்ணித்துள்ளது. மேலும் ,அந்த நாட்டுக்கு ஏதிரான தொடர் நடவடிக்கையின் தொடக்கம் இது எனவும் வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய எல்லை நகரான கேசிங்கிற்கு தென் கொரியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் வழக்கமான தினசரி அழைப்புகளை வட கொரிய அரசு இன்று முதல் நிறுத்தியுள்ளது.

வட கொரியாவிலிருந்து தப்பித்து சென்றவர்கள் தென் கொரியாவிலிருந்து துண்டு பிரசுரங்கள் அனுப்புவதை அந்நாட்டு அரசு தடுக்கவில்லை என்றால்,அனைத்து தொடர்புகளும் நிறுத்தப்படும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வட கொரியாவின் இந்த அறிவிப்பு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலக அளவில் கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் பதற்றத்தைக் குறைக்க 2018-ம் ஆண்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் அலுவலகத்தை அமைத்திருந்த போதும் 1953-ல் கொரிய போர் முடிந்த பின்னர் இரு கொரிய நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படாததால், இன்னும் அங்குபதற்றம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் வட கொரியா மற்றும் தென் கொரிய அதிகாரிகள் இடையிலான அனைத்து தொலைத் தொடர்புகளையும் யூன் 9-ம் திகதி 12 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்ராணுவம் தொடர்பான தொடர்புகளும் நிறுத்தப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.
தென் கொரிய அதிகாரிகளுடன் நேருக்கு நேர் அமர்ந்து, எந்த பிரச்சனை பற்றியும் விவாதிக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு தாங்கள் வந்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. #தென்கொரியா  #வடகொரியா  #அமைதிஒப்பந்தம் #கொரோனா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.