அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலும், லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த காவல்துறை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் இவ்வாறு ஒரு சில காவல்துறையினரின் செயற்பாடுகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையானது அதிகாரத்தை துஸ்பிரயோகப்படுத்தியமையாகும் என முன்னாள் நாடாhளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தனது ருவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ள அவர் பயங்கரமான கனவில் இருந்தது போல் இந்த சம்பவத்தை உணர்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயக நாடொன்றில் எவருக்கும் கருத்து தெரிவிப்பதற்கான முழு சுதந்திரம் உள்ளதாக தெரிலித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அதுவே ஜனநாயகத்தின் முக்கிய பண்பு எனவும் அவ்வாறு ஜனநாயக விழுமியங்கள் கடைப்பிடிக்கப்படாத ஒரு நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியாது எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில்; தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான அறிக்கையை விரைவில் சட்டமா அதிபரிடம் கையளிக்கவுள்ளதாக சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது #ஆர்ப்பாட்டம் #தாக்குதல் #கண்டனம்