Home இலங்கைஆர்ப்பாட்டத்தின் போது கடமையிலிருந்த காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

ஆர்ப்பாட்டத்தின் போது கடமையிலிருந்த காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

by admin


கொள்ளுபிட்டியில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த யூன் 6 ஆம் திகதி கொள்ளுபிட்டியில் முன்னிலை சோசலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடமையில் ஈடுபட்ட கொள்ளுப்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் காவல்துறையினரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அத்திடிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. #ஆர்ப்பாட்டம் #காவல்துறைஅதிகாரிகள்   #தனிமைப்படுத்தல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More