Home இலங்கையாழில் இருந்து தமிழகம் சென்ற வியாபாரிக்கு கொரோனோ இல்லை

யாழில் இருந்து தமிழகம் சென்ற வியாபாரிக்கு கொரோனோ இல்லை

by admin

யாழ். இணுவில் பகுதியில் நீண்ட காலமாக தங்கியிருந்த நிலையில் , தமிழகம் திரும்பியவருக்கு கொரோனோ தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இணுவில் பகுதியில் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த முதலாம் திகதி தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்து.
குறித்த செய்தியின் அடிப்படையில் , வடமாகாண சுகாதார பணிமனையினர் , வியாபாரியுடன் யாழில் தொடர்பினை பேணியவர்கள் என அடையாளம் காணப்பட்ட 13  பேரை தனிமைப்படுத்தி , அவர்களுக்கும் கொரோனோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , அவர்களுக்கு தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை கிடைக்க பெற்ற போதிலும் , அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையிலையே குறித்த வியாபாரிக்கு கொரொனோ தொற்று இல்லை என தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனோ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திண்டுக்கல்லில் உள்ள தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். #யாழ் #இணுவில் #தமிழகம் #கொரோனோ
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More