Home இலங்கைவல்லை இராணுவ முகாமுக்கு அருகில் குண்டு வெடிப்பு ?

வல்லை இராணுவ முகாமுக்கு அருகில் குண்டு வெடிப்பு ?

by admin

 

யாழ்.வல்லை இராணுவ முகாமுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் காவல்துறையினரின் விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகின்றது.  வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக நெல்லியடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, முகாமினுள் தவறுதலான வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து காவல்துறையினரின் மேலதிக விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்தது.
அதேவேளை, இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் அநாதரவாக கிடந்த பொதி ஒன்றினை நடைபயிற்சியில் ஈடுபட்ட இராணுவத்தின் அதிகாரி தரமுடையவர் அதனை எடுத்து பரிசோதித்த போது அது வெடித்ததில் அதிகாரி காயமடைந்த நிலையில் பலாலி இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #வல்லை #இராணுவமுகாம்  #குண்டுவெடிப்பு  #இராணுவத்தினர் #காயமடைந்த
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More