குளோபல் தமிழ்ச் செய்திகள்
லிபியாவில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இரண்டு முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் ஐஎஸ் அமைப்பின் கோட்டையான சிர்ட்டே நகரில் அமைந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாமகள் மீது தமது படைகள் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இவர்கள் ஐரோப்பா மீது புதிய பயங்கரவாத தாக்குதலகளை மேற்கொள்ள சதி செய்தனர் எனவும் அமெரிக்க ராணுவ தளமான பெண்டகனின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என யாரும் கொல்லப்படவில்லை எனவும் பெண்டகனின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.