Home இலங்கைஜனாதிபதியின் உதவியின்றி எவராலும் ஆட்சி அமைக்க முடியாது – மஹிந்த அமரவீர

ஜனாதிபதியின் உதவியின்றி எவராலும் ஆட்சி அமைக்க முடியாது – மஹிந்த அமரவீர

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியின்றி எவராலும் ஆட்சி அமைக்க முடியாது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். திக் ஓவிட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் அவ்வாறு செய்வதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும், நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே ஆட்சி மாற்றம் செய்யப்பட முடியும் எனவும்   ஜனநாயக அரசாங்கமொன்றை வேறு வழிகளில் கவிழ்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More