போலி முகநூல் ஊடாக மன்னார் சட்டத்தரணி ஒருவரின் கடமையினை சுதந்திரமாக செய்ய விடாமல் அச்சுறுத்தும் விதமாக பதிவுகளை முகநூலில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது குறித்த நபரை மன்னார் நீதவான் மா.கணேசராஜா நாளை வெள்ளிக்கிழமை 19 ஆம் திகதி வரை விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார்.
மன்னார் தனியார் வாடகை வாக உரிமையாளர் சங்கத்தினரால் தங்களுக்கு வாகனத்தரிப்பிடம் ஒன்று வேண்டுமென்று மன்னார் நகர சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கினை சிரேஸ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் வாதாடியிருந்தார். இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட உடன் பாட்டின் அடிப்படையில் குறித்த வழக்கு இணக்கமாக தீர்க்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளதுரு.
இது இவ்வாறு இருக்கையில் வழக்கு நிலுவையில் இருந்த காலப் பகுதியில் மேற்படி போலி முகநூல் ஊடாகவும், இன்னும் ஒருசில முகநூல் ஊடாகவும் சட்டத்தரணி பா.டெனிஸ்வரனுக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் பல்வேறு பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக பா.டெனிஸ்வரன் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைவாக மேற்படி சந்தேக நபர் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த நபரை நாளை வெள்ளிக்கிழமை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. #போலி #முகநூல் #சட்டத்தரணி #அச்சுறுத்தல் #விளக்கமறியல்